×

அரூரில் டெங்கு ஒழிப்பு பணி ஆய்வு

அரூர், நவ.1: அரூர் தேர்வு நிலை பேரூராட்சி எல்லைக்குட்பட்ட 18 வார்டுகளிலும், தீவிர டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஜீஜாபாய் பார்வையிட்டார். டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசுப்புழுக்கள் அழிப்பு பணிகள், வடிகால் சுத்தம் செய்யும் பணிகள், கொசு மருந்து அடிக்கும் பணி, குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீர் விநியோகம் ஆகிய பணிகளை அவர் ஆய்வு செய்தார். இதில் பேரூராட்சி பணியாளர்கள், டெங்கு காய்ச்சல் தடுப்பு களப்பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Dengue Eradication Mission ,Aurora ,
× RELATED அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம்...